இரண்டாவது பாடல்
நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’ இப்படத்தில் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் 29-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நானே வருவேன் படத்தின் ‘ரெண்டு ராஜா’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் தனுஷ் இணைந்து பாடியுள்ளனர்.
Finally they are here to rule the charts with the 2nd single #RenduRaaja from #NaaneVaruvean https://t.co/xyDsQ9Bk8Q @dhanushkraja @selvaraghavan @thisisysr @theedittable @omdop @RVijaimurugan @saregamasouth
— Kalaippuli S Thanu (@theVcreations) September 24, 2022

