டீசர் ரிலீஸ்
தனுஷ் நடிப்பில், இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘நானே வருவேன்’. இப்படத்தில் இந்துஜா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்க, எல்லி அவுரம், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், ‘நானே வருவேன்’ திரைப்படத்தின் டீசர் வரும் 15-ம் தேதி வெளியாகும் என்று கலைப்புலி எஸ்.தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
எண்ணியது எண்ணியபடி, சொன்னது சொல்லியபடி #NaaneVaruvean செப்டம்பர் மாதம் வெளியீடு. நீங்கள் ஆவலுடன் காத்திருந்த teaser வரும் 15 தேதி வெளியிடப்படும், என்பதை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன்.@dhanushkraja @selvaraghavan @thisisysr @omdop @Rvijaimurugan @theedittable @saregamasouth pic.twitter.com/eknZsT9ZzS
— Kalaippuli S Thanu (@theVcreations) September 13, 2022

