தேசிய சினிமா தினத்தின் தேதியை மாற்றி மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
தேசிய சினிமா தினம்
செப்டம்பர் 16-ம் தேதியை தேசிய சினிமா தினமாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அமைப்பு அறிவித்தது. மேலும், அந்த தினத்தில் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் 75 ரூபாய்க்கு மட்டுமே டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை அறிந்த சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர். இந்நிலையில், தேசிய சினிமா தினத்தை செப்டம்பர் 23-ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.
தேதி மாற்றம்
செப்டம்பர் 16-ம் தேதி பெரிய படங்கள் திரைக்கு வருவதாலும், சமீபத்தில் வெளியான பிரம்மாஸ்திரா படத்தின் வசூல் பாதிக்கப்படும் என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

