பிரம்மாஸ்திரா திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நடிகை நடிகை ஆலியா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.
ஹிந்தி நடிகை
அயன் முகர்ஜி இயக்கத்தில், நடிகர் ரன்பீன் கபூர் மற்றும் நடிகை ஆலியா பட் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் பிரம்மாஸ்திரா. இந்த படத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் கடந்த ஐந்து ஆண்டுகளாக தயாரிப்பில் உள்ளது. இதன் படப்பிடிப்பில் தான் ரன்பீன் கபூர், ஆலியா பட் காதலிக்க தொடங்கினர். ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து கடந்த ஜூன் மாதம் ஆலியா பட் தான் கருவுற்றிருப்பதாக அறிவித்தார்.
இந்நிலையில், ஐதராபாத்தில் நடைபெற்ற பிரம்மாஸ்திரா திரைப்பட புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஆலியா பட் ‘BABY ON BOARD’ என்ற வாசகம் பொறித்த பிங் நிற ஆடையை அணிந்து வந்திருந்தார்.

