இந்தியாபயணம்

உத்தரபிரதேசத்தில் பயங்கர விபத்து : சொகுசு பேருந்து மீது மோதிய லாரி

உத்தரபிரதேசத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த பேருந்து மீது லாரி ஒன்று மோதியதில் 4 பேர் உயிரிழப்பு.

விபத்து

நேபாளத்தில் இருந்து இரட்டை அடுக்கு சொகுசு பேருந்து ஒன்று கோவா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணம் செய்தனர். அப்போது அந்த பேருந்தின் டயர் பஞ்சரானது. ஓட்டுநர் பேருந்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு டயரை மாற்றிக் கொண்டிருந்தார். இந்நிலையில், அந்த பகுதியில் வேகமாக வந்த லாரி ஒன்று திடீரென பேருந்தின் மீது மோதியது. 60 பேர் பயணித்த அந்த பேருந்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். மேலும், 24 பேர் பலத்த காயத்துடன் உயிர் தப்பினர்.

அதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related posts