இரண்டாம் சிங்கள்
மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. இந்த ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சிறப்பு தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரித்துள்ளார். பிசாசு-2 படத்தின் முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
Yet another Mesmerising Musical Treat from @DirectorMysskin #Pisasu2 #NenjaiKelu 2nd Single https://t.co/F7c27kU0rZ#KarthikRaja@PriyankaNKOffl#Kabilan@Rockfortent @VijaySethuOffl @Lv_Sri @actor_ajmal @shamna_kkasim @Actorsanthosh @kbsriram16 @APVMaran @saregamasouth
— Andrea Jeremiah (@andrea_jeremiah) August 25, 2022

