கோவில்பட்டி திட்டங்குளத்தில் கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து தலைவர் குடும்பத்தினரை சந்தித்து அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறினார்.
அமைச்சர் கீதாஜீவன்
கோவில்பட்டி, தெற்கு திட்டங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (67). இவர் கடந்த 22ம் தேதி தனது தோட்டத்தில் இருக்கும் போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 குற்றவாளிகளை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர் பொன்ராஜ் வீட்டிற்கு இன்று சென்றார். அப்போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பொன்ராஜ் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், அவர் மனைவி பொன்னுத்தாய் மற்றும் உறவினர்களுக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். அமைச்சருடன் கோவில்பட்டி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.