கப்பல் விபத்து
குஷிமோட்டோ கடலோர காவல் படையின் தகவலின்படி, இன்று அதிகாலை ஜப்பானின் தென்மேற்கு கடற்பகுதியில் சரக்குக் கப்பல் மீது ரசாயன டேங்கர் கப்பல் ஒன்று திடீரென்று மோதி உள்ளது. இந்த விபத்தின் போது டேங்கர் கப்பலில் ஆறு ஜப்பானிய பணியாளர்கள் மற்றும் சரக்கு கப்பலில் இருந்த 14 சீன பணியாளர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். மேலும், விபத்தில் சரக்கு கப்பலின் என்ஜின் பகுதியில் இருந்து எண்ணெய் கசிந்ததாகவும், பின்னர் அது சரி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது டேங்கர் கப்பல் தங்கள் கப்பலை எதிர்பாராத விதமாக மோதியதாக சரக்கு கப்பல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்

