மஹாராஷ்டிராவில் பயணிகள் ரயில், சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் 50 பேர் படுகாயமடைந்துள்ளார்.
ரயில் விபத்து
சத்தீஸ்கர் மாநிலம், பிலாஸ்பூர் பகுதியில் இருந்து பயணிகள் ரெயில் நேற்று ஜோதாப்பூர் நோக்கி புறப்பட்டு சென்றது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் மகாராஷ்டிரா மாநிலத்தின் கொண்டியா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரெயில் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பயணிகள் ரெயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ரெயில்வே காவல்துறையினர்கள், மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை. சிக்னல் கோளாறு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

