கர்நாடகவில் மறுபிறவி எடுக்க வேண்டும் என்று இளைஞர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருந்ததி படம்
கர்நாடக மாநிலம், தும்கூர் மாவட்டத்தில் உள்ள கொண்டவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரேணுகாபிரசாத். 23 வயதான இவர் பியுசி முதல் ஆண்டுடன் படிப்பை நிறுத்தி விட்டார். திரைப்படங்களில் அதிகம் ஆர்வம் கொண்ட ரேணுகாபிரசாத் கடந்த சில நாட்களாக அதிக அளவில் திகில் படங்களை பார்த்துள்ளார். அந்த வகையில், அனுஷ்கா நடிப்பில் வெளியான ‘அருந்ததி’ திரைப்படத்தை தொடர்ச்சியாக பலமுறை பார்த்து வந்துள்ளார்.
தற்கொலை
அந்த படத்தில், கதாநாயகி தன்னைத் தானே மாய்த்து கொண்டு மறுபிறவி எடுப்பதுபோன்று ரேணுகாபிரசாத்தும் மறுபிறவி எடுத்து பணக்கார குடும்பத்தில் பிறக்க வேண்டும் என்று பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த்துள்ளார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

