நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலும் தொடர்ந்து 3 நாட்கள் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார்.
தேசியக்கொடி
நாட்டின் 75வது சுதந்திரத்தினத்தை முன்னிட்டு வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு வீடுகளில் தேசியக்கொடியை ஏற்ற மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டில் உள்ள அனைத்து வீடு, அலுவலகம், உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தேசிய கோடி ஏற்றுமாறு பிரதமர் மோடியின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் வீடுகளில் மக்கள் தேசியக்கொடி ஏற்றி வருகின்றனர்.

