அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கொரோனா பாதிப்பு
தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனக்கு இரண்டாவது முறையாக மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார். அவருக்கு கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் இரண்டாவது முறையாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சோனியா காந்தி
ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னார் தீவிர சிகிச்சைக்கு பிறகு வீடு திருப்பிய நிலையில், தற்போது சோனியா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் அறிவித்துள்ளார்.
Congress President Smt. Sonia Gandhi has tested positive for Covid-19 today. We wish her speedy recovery and good health.
— Congress (@INCIndia) August 13, 2022

