அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் ராக்கர்ஸ் வெப் சீரிஸின் பாடல் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
புதிய அப்டேட்
ஈரம் படத்தை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வெப் சீரிஸ் தமிழ் ராக்கர்ஸ். இதில், வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி வைத்தியநாதன் மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏவிஎம் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த வெப் சீரிஸ் 19-ம் தேதி சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடல் வீடியோ ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
🎶அதிரடியா வரோம் ஆகஸ்ட் 19 முதல் 🎶#Tamilrockerz – #SonyLIV தமிழ் ஒரிஜினல் web series.#SitelaillaSonyLIVla @arunvijayno1 @dirarivazhagan @avmproductions @vanibhojanoffl @ishmenon @DopRajasekarB @EditorSabu pic.twitter.com/majBwzslvQ
— SonyLIV (@SonyLIV) August 11, 2022

