குஜராத் மாநிலத்தில் பிரபல தங்கும் விடுதிஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 27 நபருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து
குஜராத், ஜாம் நகரில் பிரபல தங்கும் விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அரபி கடல் ஓரமாக அமைந்துள்ள அலெண்டோ என்ற 4 தளங்களை கொண்ட ஓட்டல் ஓன்று உள்ளது. இதன் அருகே பெரிய பெரிய தொழில்சாலைகள் அமைந்துள்ளது. நேற்று இரவு சுமார் 7 மணிக்கு இந்த விடுதியின் கீழ் தளத்தில் தீ பிடித்தது. மிகவும் வேகமாக பரவிய தீ சில நிமிடங்களில் அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது. இதனால் அந்த விடுதி அறைகளில் தங்கியிருந்தவர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசாரும், விடுதி அறைகளில் சிக்கியிருந்த 27 பேரையும் பத்திரமாக மீட்டனர். பின்னர் தீயை அணைப்பதற்காக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. சுமார் 2 மணிநேரத்திற்கு பின்னர் தீயை முழுமையாக அணைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்துள்ளது. மேலும், விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

