திருச்சிற்றம்பலம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் அனிருத் பாடிய பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இசை வெளியீட்டு விழா
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் திருச்சிற்றம்பலம். தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர் இந்த படத்தை இயக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திலிருந்து சமீபத்தில் வெளியான தேன்மொழி என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
சந்தோஷ் நாராயணன் குரலில் வெளியான இந்த பாடலை திருசிற்றம்பலம் இசை வெளியீட்டு விழாவில் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் தனுஷ் இணைந்து பாடினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
We are still not over DnA’s version of #Thenmozhi 🥺#Thiruchitrambalam releasing on 18th August.
@dhanushkraja @anirudhofficial #Bharathiraja @prakashraaj @MithranRJawahar @MenenNithya @RaashiiKhanna_ @priya_Bshankar pic.twitter.com/vYWmQKywIJ— Sun Pictures (@sunpictures) August 10, 2022

