நாகப்பட்டினத்தில் பேருந்து ஒன்றில் பிடித்த போடாத காரணத்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது தாக்குதல் நடத்தியும் பயணி.
தாக்குதல்
நாகப்பட்டினம், ஆயமலை கிராமம் அருகே ஓடும் தனியார் மினி பேருந்து ஒன்றில் பாடல்கள் ஒலி பரப்பப்பட்டது. அப்பொழுது அந்த பாடலை மற்ற சொல்லி எதிர்ப்பு தெரிவித்த பயணி ஒருவர், அடுத்த பாடலை வைக்க சொல்லி தகராறு செய்துள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர் அதற்கு மறுத்த காரணத்தால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து அடுத்த பேருந்து நிறுத்தத்திலேயே அந்த பயணி இறக்கி விடப்பட்டுள்ளார். பின்னர் அந்த பயணி அவரது நண்பர்களுடன் அதே நிறுத்தத்தில் காத்திருந்த நிலையில் மீண்டும் அதே பேருந்து மீண்டும் அவ்வழியாக வந்த பொழுது பேருந்தில் நண்பர்களுடன் ஏறிய பயணி தனது நண்பர்களுடன் சேர்ந்து பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று சரமாரியாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவ அறிந்த போலீசார் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

