செஸ் ஒலிம்பியாட்டில் பதக்கம் வென்ற இந்திய அணிகளுக்கு பரிசுத்தொகையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பரிசுத்தொகை
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த 29-ம் தேதி தொடங்கியது. இதில் 186 நாடுகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். 11 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தான் அணி தங்கம் வென்றுள்ளது. அர்மேனியா வெள்ளிப்பதக்கத்தையும், பொதுப் பிரிவில் இந்திய பி அணியும்’ பெண்கள் பிரிவில் இந்திய ஏ அணி என்று இரண்டு அணிகளும் வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளது.
இந்நிலையில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பதக்கம் வென்றுள்ள இந்திய அணிகளுக்கும் தலா ரூ.1 கோடி பரிசுத்தொகையாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
44ஆவது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டியில் பதக்கங்கள் வென்ற இரண்டு இந்திய அணிகளுக்கும் பரிசுத் தொகையாக தலா ரூ. 1 கோடி வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பிக்கும் என மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அறிவித்துள்ளார். @chennaichess22
#ChessChennai2022 #ChessOlympiad pic.twitter.com/fGi8tHw0gs
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 10, 2022

