கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைதான பள்ளி தாளாளர் உள்ளிட்டோரின் ஜாமீன் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஜாமீன் மனு ஒத்திவைப்பு
கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக கைதான பள்ளி தாளாளர் உள்ளிட்டோரின் ஜாமீன் கோரிய கடந்த மாதம் மனு அளித்துள்ளனர். இந்நிலையில் அந்த மனு மீதான விசாரணை இன்று விழுப்புரம் நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி முன் வந்தது. அப்போது, ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகின்ற 18ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் மற்றும் 2 ஆசிரியர்கள் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தனர்.

