சென்னையில் இலவச பிங்க் நிற பஸ் சேவையை இன்று தொடங்கி வைத்தார் உதயநிதி ஸ்டாலின்.
போக்குவரத்து கழகம்
மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்ற பின் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பில் சாதாரண நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக சென்னையில் உள்ள 50 சதவீத மாநகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில பெண்கள் தவறுதலாக டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர்.
பிங்க் பஸ்
இந்த குழப்பத்தை போக்கும் வகையில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் சாதாரண கட்டண பேருந்துகளுக்கு பிங்க் நிறத்தில் மாற்ற முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலகம் அருகே சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து இந்த சேவையை தொடங்கி வைத்தார்

