செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழாவை பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
செஸ் ஒலிம்பியாட்
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் கடந்த மாதம் 29ம் தேதி தொடங்கி வரும் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 186 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள். இதன் தொடக்க விழா கடந்த மாதம் 28ம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர். என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிறைவு விழா
இந்நிலையில், இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 10ம் தேதி நிறைவுபெறுகிறது. இதனையொட்டி இதற்கான நிறைவு விழாவை வரும் 9ம் தேதி பிரமாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த நிறைவு விழாவை ஒடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்படுகிறது.

