கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான வரும் 5ம் தேதி முதல் கவுன்சிலிங் நடைபெறும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
கவுன்சிலிங்
இது குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 163 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 1.3 லட்சம் இடங்களில் சேர 4 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விண்ணப்பம் செய்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் மாணவ சேர்க்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு வரும் 5ம் தேதி முதல் கவுன்சிலிங் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

