மறைமலைநகர் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைகளை விற்பனை செய் 3 நபர்களை கை செய்துள்ளனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை
மறைமலைநகர் அருகே உள்ள பேரமனூர் பகுதியில் மளிகை கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த தியாகராஜன் (35), ராஜேந்திரன் (63) இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் ஆப்பூர் சாலையில் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்த தமிழ்மணி (38) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து புகையிலைபொருட்டுகளை பறிமுதல் செய்தனர். இது குறித்து மறைமலைநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 3 நபர்களிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

