எண்ணூரில் ஆற்றின் குறுக்கே உயர்மின் அழுத்த கோபுரங்களை அகற்றப்படாததை எதிர்த்து சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டம்
எண்ணூர் முகத்துவாரத்தில் ஆற்றில் மின் அழுத்த கோபுரங்கள் அமைப்பதற்காக சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதனால் மீனவர்கள் தொழில் செய்ய முடியாமல் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 31-ந் தேதிக்குள் இதை அகற்றாவிட்டால் நாம் தமிழர் கட்சின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சீமான் எச்சரித்திருந்தார். இந்நிலையில், மின் அழுத்த கோபுரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. அதனால் நேற்று எண்ணூர் பஜாரில் நாம் தமிழர் கட்சியினர் சீமான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
#எண்ணூர் கொற்றலை ஆற்றின் மீன்பிடி பகுதியில் சட்டவிதிகளை மீறி TANTRANSCO ஆக்கிரமித்துக் கட்டிவரும் தொடரமைப்பு கோபுரங்களின் கட்டுமானத்தை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பாக 31-07-2022 அன்று நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்https://t.co/KzDBW5j9pr#NTKProtects_EnnoreCreek pic.twitter.com/Fbo8HqMXi4
— சீமான் (@SeemanOfficial) August 1, 2022

