அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தார்.
ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு கடந்த வாரம் கண்டறியப்பட்டது. இந்நிலையில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். ஜோபைடனை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் ஜோபைடன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளார். இதுகுறித்து அதிபரின் டாக்டர் கெவின் ஓகானர் கூறுகையில், ‘அதிபர் ஜோபைடனுக்கு நேற்று மாலை மற்றும் இன்று காலை நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வந்துள்ளது. அவருக்கு காய்ச்சல் இல்லை. கொரோனா அறிகுறிகள் முற்றிலும் நீங்கிவிட்டன’ என்றார். இதையடுத்து அதிபர் ஜோ பைடன் தனது அலுவலக பணிகளை பெற்றுக்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

