மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சிறைக்கு செல்வது உறுதி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சிறை உறுதி
கரூர் மாவட்டத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். அப்போது கூட்டத்தில் பேசிய அவர், ‘திமுகவினர் தங்களின் சுய லாபத்திற்க்காக மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளன. கரூர் மாவட்டத்தை சார்ந்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அனைத்து மக்களின் மடியில் கை வைப்பதற்காகவே மின்கட்டண உயர்வினை ஏற்படுத்தியுள்ளார். ஏன் மின் கட்டணம் உயர்வினை உயர்த்தினீர்கள் என்று கேட்டால், மத்திய அரசு கேட்டுக்கொண்டதால் நாங்கள் உயர்த்தினோம் என கூறுகிறார்.
அதிகமாக பொய் சொல்லும் அமைச்சராக செந்தில் பாலாஜி விளங்கி வருகிறார். மின் கட்டணத்தை உயர்த்தக் கோரி மத்திய அரசு எழுதிய கடிதத்தை செந்தில் பாலாஜி உடனடியாக வெளியிட வேண்டும். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், செந்தில்பாலாஜியை போல யாரும் இல்லை என்று புகழ்ந்துள்ளார். காரணம் கோபாலபுரத்திற்கு வரும் டாஸ்மாக் வருமானம், மின் துறை மூலம் தனியார் நிறுவனம் மூலம் வரும் கோடிக்கணக்கான வருமானம் வருகிறது. செந்தில் பாலாஜி சிறைக்கு செல்ல தயாராகி கொள்ள வேண்டும். செந்தில் பாலாஜிக்கு சிறை உறுதி என அண்ணாமலை பேசியுள்ளார்.

