கனியாமூர் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் வகுப்பு
கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார். அங்கு ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி முழுவதும் அடித்து நொறுக்கப்பட்டது. தனியார் பள்ளி முழுவதும் பலத்த சேதமடைந்துள்ளதாலும், அங்குள்ள ஆசிரியர்கள் சிலர் மீது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பள்ளியில் படித்து வந்த மாணவர்களுக்கு மீண்டும் வகுப்புகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த பெரிய கலவரத்தால் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மற்ற மாணவர்களும் பள்ளி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையில், முதல் கட்டமாக அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

