விருதுநகர் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கணித ஆசிரியர் கைது
சாத்தூர் அருகே புதுச்சூரங்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு புதுச்சூரங்குடி சுற்றுவட்டாரத்தில் உள்ள மாணவர்கள் சுமார் 300 படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரியும் தாமோதரன். இவர் அந்த பள்ளியில் பயின்று வரும் பள்ளி மாணவ, மாணவிகளை வகுப்பறையில் ஆபாச வார்த்தையில் பேசுவதும், ஒருமையில் திட்டுவதும், தொடர்ந்து பாலியல் ரீதியாக மாணவிகளிடம் தொந்தரவு கொடுத்து வந்ததாக புகார் எழுந்துள்ளது. எனவே, அந்தப் பள்ளி மாணவிகள் மிகுந்த மன உளைச்சல் அடைந்து பள்ளி ஆசிரியர் குறித்து பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இன்று பள்ளியில் ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி கிராம மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து நேரில் வந்த காவல்துறையினர், முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையிலும், மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலும் ஆசிரியர் தாமோதரனை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

