அரசு பள்ளி மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இலவச சைக்கிள் திட்டம்
அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உதவி பெறும் வகையில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்றால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகள் அரசு பள்ளிகளில் பயின்று வந்த 11ம் வகுப்பு மாணவர்களுக்கான இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் தடைபட்டது.
இந்நிலையில், சென்னை, நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இலவச சைக்கிள் திட்டத்தை இன்று மீண்டும் தொடங்கிவைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், இந்த திட்டத்தின் கீழ் 323.03 கோடி செலவில், 6,35,947 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படவுள்ளது.

