கேரளா மாநிலத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடையை கழற்ற வைத்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நீட் தேர்வு
கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் மார்தோமா உயர்கல்வி நிறுவனத்தில் கடந்த 17ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வெழுத சென்ற மாணவிகளின் உள்ளாடையை கழற்ற சொல்லி பெண் அலுவலர்கள் கடுமையாக நடந்து கொண்டதாக காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது. இந்நிலையில், அந்த தேர்வு மையத்தில் அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று தேசிய தேர்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கைது நடவடிக்கை
இதனையடுத்து இந்த சம்பம் குறித்து மத்திய கல்வித்துறை ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தியது. இதன்பெயரில் தேர்வு மைய வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யப்பட்டது. அதில் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்ற வைத்தது உறுதியாகி உள்ளது. இதனால் 3 தேர்வு முகமை பணியாளர்கள் மற்றும் 2 கல்லூரி ஊழியர்கள் என்று 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

