லிங்கா திரைப்படத்தில் தற்போது உள்ள க்ளைமாக்ஸ் நான் யோசித்தது இல்லை என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூறியுள்ளார்.
வெற்றி கூட்டணி
ரஜினி காந்த நடிப்பில் வெளியான முத்து, படையப்பா ஆகிய படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவிக்குமார். இந்த இரண்டு படங்களுமே நடிகர் ரஜினிக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. குறிப்பாக முத்து திரைப்படம் ரஜினியை வெளிநாடு வரை கொண்டு சேர்த்தது. இதனையடுத்து ரஜினி காந்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணியில் 2014ம் ஆண்டு வெளியான படம் லிங்கா. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இத்திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது.
கே.எஸ்.ரவிக்குமார்
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கே.எஸ்.ரவிக்குமார், ‘லிங்கா படத்தின் க்ளைமாக்ஸ் தற்போது இருப்பது இல்லை. அதில் பலூன் காட்சியே கிடையாது. படத்தில் லிங்கேசன் கதாப்பாத்திரம் தான் கதாநாயகன். வில்லனை சாகடிக்கும் காட்சியை இளமை கதாப்பாத்திரத்திற்கு கொடுங்க என்று ரஜினி சார் தான் சொன்னார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை என்றாலும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாக இருந்தது’ என்று கே.எஸ்.ரவிக்குமார் கூறினார்.

