இந்தியாவில் குடியுரிமையை துறந்த இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
குடியுரிமையை துறந்த இந்தியர்கள்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி ஆகஸ்டு மாதம் 12ந்தேதி வரை நடைபெறம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதேபோல் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபத் திட்டம், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு உள்ளிட்ட கேள்விகளை எதிர்க்கட்சிகள் எழுப்ப திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய், இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 3,92,456 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். கடந்த 2017 முதல் 2022 வரையான ஆண்டுகளில் 5,220 வெளிநாட்டவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டு உள்ளது. கடந்த நவம்பரில் மக்களவையில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறுகையில் 5 ஆண்டுகளில் 6,08,162 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர். இதன்படி, நாட்டில் ஆண்டும் சராசரியாக 1,21,632 பேர் இந்திய குடியுரிமையை வேண்டாம் என கைவிடுகின்றனர்.

