நீலகிரியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 2 இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மது விற்பனை
ஊட்டி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை அதிகளவில் நடந்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் நேற்று ஊட்டி மார்க்கெட் பகுதியில் மத்திய காவல் ஆய்வாளர் பிலிப், இணை ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் அதிரடியாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மறைத்து வைத்து மது விற்பனை செய்த செங்காந்தல் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (33), விஜயதரன் (29) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும், சட்டவிரோத மது விற்பனையை தடுக்க கண்காணிப்பு குழுவை அமைத்து போலீசார் தீவிரப்படுத்தி தேடிவருகின்றனர்.

