மாணவர்களுக்கு காகித கலை பயிற்சி அளிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மருத்துவர் ராமதாஸ் அறிக்கை
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காகிதக் கலைப் பயிற்சி அளிக்க வேண்டும். வட இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. பயிற்சியாளர்களுக்கு தமிழில் பேசவோ, எழுதவோ தெரியாது . பயிற்சியாளர்களால் வழங்கப்படும் நூலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எந்திர மொழியாக்கம் செய்யவேண்டும். காகித கலையை கற்பிக்க தமிழ்நாட்டில் ஆட்களே இல்லாததைப் போன்று வட இந்தியர்களை வகுப்பெடுக்க அனுமதிக்க வேண்டிய தேவை என்ன ? என்பது தான் பள்ளிக்கல்வித் துறை விடையளிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக வட இந்திய பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டு கலை ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பயிற்சியை அரசு வழங்க வேண்டும்’ என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

