இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்ய இந்திய அரசு தயாராக இருக்கிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கேரளாவில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசியுள்ளார். `இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி ஒரு தீவிரமான சூழல் உருவாகியுள்ளது. இலங்கைக்கு தேவையான உதவிகளை செய்ய இந்திய அரசு தயாராக இருக்கிறது. அண்டை நாடான இலங்கை பாதிப்புக்குள்ளாகும் போதெல்லாம் இந்தியா அக்கறையுடன் செயல்பட்டு வருகின்றது.
மேலும், இப்போது இலங்கை மக்கள் தங்களின் சொந்தப் பிரச்னைகளை தீர்க்க முற்பட்டு வருகின்றது. எனவே பொதுமக்கள் என்ன செய்கிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தற்போதைக்கு இலங்கை அகதிகள் நெருக்கடி எதுவும் இந்திய அரசு கிடையாது. இந்த ஆண்டு மட்டும் இலங்கையின் பொருளாதார நெருக்கடியால், 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க மத்திய அரசு உதவிவருகின்றது’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

