கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களைதான், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துக்கொண்டிருக்கிறார் என்று இபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுக்குழு கூட்டம்
அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.
இபிஎஸ் பேச்சு
அதற்குபிறகு எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், இடைக்கால பொதுச்செயலாளராக என்னை தேர்வு செய்துள்ளீர்கள். திமுக ஆட்சிக்கு முடிவு கட்டி அதிமுக மீண்டும் ஆட்சியில் அமரும் அதற்காக நான் கடுமையாக உழைப்பேன்’ என்று இபிஎஸ் கூறியுள்ளார்.

