அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருவதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
ஆலோசனைக் கூட்டம்
ஸ்ரீரங்கத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில், அந்த கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு அந்த கட்சியின் மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இளையராஜாவுக்கு எம்.பி., பதவி கிடைத்தது தமிழ் நாட்டிற்கு கிடைத்த கௌரவம். இதனை அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்க கூடாது. தமிழகத்தை மூன்றாக பிரிக்கும் கோரிக்கைக்கு தமிழக அரசு கட்டாயமாக ஆதரவளிக்க வேண்டும்.
அர்ஜூன் சம்பத் குற்றச்சாட்டு
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உதயநிதி ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதனால் தமிழகத்தில் பள்ளிக் கல்வி மிகவும் மோசமாக உள்ளது. 40,000 பேர் தமிழ் பாடத்தில் தோல்வியடைந்துள்ளனர்.

