சேலத்தில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்திவருகின்றனர்.
உண்ணாவிரத போராட்டம்
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அடுத்த தும்பிப்பாடி பகுதியில் விவசாயிகளின் நிலத்தை விமான நிலையத்திற்கு கையகப்படுத்துவதற்காக அதிகாரிகள் வந்தனர். மேலும், அளவீடு செய்ய விவசாயிகளிடம் பலமுறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, நிலத்திற்கு கூடுதலாக பணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மேலும், ஏக்கர் ஒரு கோடிக்கும் மேல் விற்பனை நடந்து வருகிறது. ஆனால் அதிகாரிகள் மதிப்பீடு குறைவாக வழங்குவதாக விவசாயிகள் உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம் என்று தெரிவித்தனர்.

