பொன்னியின் செல்வன் படம் மணி சார் நமக்கு அளித்த பரிசு என்று நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
பொன்னியின் செல்வன் படம்
மணிரத்னம் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் படம் பொன்னியின் செல்வன். இதில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என்று பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விழாவில் பேசிய நடிகர் கார்த்தி தான் நடித்துள்ள வந்தியத்தேவன் கதாப்பாத்திரம் பற்றி பேசினார்.
நடிகர் கார்த்தி பேச்சு
அவர் கூறுகையில், ‘நம் பள்ளிப்பருவத்தில் வரலாறு பாடம் என்றாலே தூங்கிவிடுவோம் ஆனால் 5 பகுதிகளைக் கொண்ட பொன்னியின் செல்வன் புத்தகத்தை மணி சார் படமாக எடுத்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் மணி சார் நமக்கு அளித்த பரிசு என்று தான் கூற வேண்டும். மேலும், வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளேன் என்று நான் என் அம்மாவிடம் கூறிய போது. எனது கல்லூரியில் உள்ள பெண்கள் எல்லாம் வந்தியதேவனை போன்ற ஒருவனைத் தான் திருமணம் செய்ய ஆசைப்பட்டார்கள்’ என்று கார்த்தி கூறினார்.

