பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை ஐந்து மொழிகளில் வெளியாகிறது. இதின் தமிழ் டீசரை நடிகர் சூர்யா வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன்
மணிரத்னம் இயக்கத்தில், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா ஆகியோர் நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன். வரலாற்று கதையை மையமாக வைத்து இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. பொன்னியின் செல்வன் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், படத்தின் டீசர் இன்று மாலை 6:00 மணிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகிறது.
நடிகர் சூர்யா
மேலும், பொன்னியின் செல்வன் படத்தின் தமிழ் டீசரை நடிகர் சூர்யா வெளியிடுவார் என்று படக்குழு அறிவித்துள்ளது. அதே வேளையில் ஹிந்தியில் அமிதாப்பச்சனும், மலையாளத்தில் மோகன்லாலும், தெலுங்கில் மகேஷ்பாபுவும் வெளியிடுகிறார்கள்.

