காவல் நிலையத்தில் பெண்ணை அடித்து துன்புறுத்திய சப் இன்ஸ்பெக்டர் உட்பட 3 பெண் காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். தனிப்படை பிரிவு காவலர் முருகன் ஆயுதப்படைக்கு மாற்றம்.
தூத்துக்குடி மாவட்டம்
தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் கிருஷ்ணா நகரை சேர்ந்த தனுஷ்கோடி மகன் பிரபாகரன் (45). இவரது வீட்டில் கடந்த 4ம் தேதி 10 பவுன் நகை மாயமானது. இது தொடர்பாக பிரபாகரன் முத்தையாபுரத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், பக்கத்து வீட்டை சேர்ந்த சுமதி (40) மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் குறிப்பிட்டுயிருந்தார்.

காவல் நிலையம்
இதையடுத்து, கடந்த 7 தேதி பெண் காவலர்கள் மெர்சினா, கல்பனா, உமா மகேஸ்வரி ஆகியோர் சுமதியை காவல் நிலையம் அழைத்து வந்துள்ளனர். மேலும் அவர்கள் மூவரும் சுமதியை கடுமையாக தாக்கி துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் சுமதியை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதில் காயம் அடைந்த சுமதி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்பு காவலர்கள் தன்னை துன்புறுத்தியதாக கடந்த 11ம் தேதி காலை மாவட்ட எஸ்பிடம் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக எஸ்பி சரவணன் விசாரணை செய்ய உத்தரவிட்டார். விசாரணையில், புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யாமலும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமலும் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தியது தெரியவந்தது.

காவலர்கள் சஸ்பெண்ட்
இதைதொடர்ந்து கடந்த 15 தேதி காவலர்கள் மூவரும் தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காத தனிப்பிரிவு காவலர் முருகன் என்பவரை ஆயுதப்படைக்கு பணியிட மற்றம் செய்து எஸ்பி சரவணன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே இந்த விவகாரத்தில் முத்தையாபுரம் காவல் நிலையை சப் – இன்ஸ்பெக்டர் முத்துமாலையை பணியிடை நீக்கம் செய்து திருநெல்வேலி சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

