தமிழ்நாடுவணிகம்

சதமடித்த தக்காளி விலை; அதிருப்தியில் இல்லத்தரசிகள்!

சென்னையில் 1 கிலோ தக்காளி ரூ.100யை எட்டியுள்ளது. மேலும் விலை உயரக்கூடுமோ என வியாபாரிகளும் பொதுமக்களும் அஞ்சுகின்றனர்.

சதமடித்தது

சமையலுக்கு தேவையான காய்கறிகளில் மிக முக்கியமானது தக்காளி. கடந்த சில நாட்களாக தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தை நிலவரப்படி இன்று ஒரு கிலோ தாக்களியின் விலை ரூ.100க்கு விற்கப்படுகிறது.

தங்கத்தை போல உயரும்

கோயம்பேட்டில் விற்கப்படும் தக்காளி விலையை விட சில்லறை வியாபாரிகளிடம் தக்காளி விலை சற்று உயர்ந்து காணப்படுகிறது. தங்கத்தை போல உயரும் தக்காளியின் இந்த திடீர் விலை மாற்றத்தால் வணிகர்களும், சில்லறை வியபாரிகளும் பொதுமக்களும் அதிருப்தியில் உள்ளனர்.

வரத்து குறைவு

அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளி லோடு சென்னை கோயம்பேடு சந்தைக்கு கொண்டுவரப்படுகிறது. தேவை அதிகரிப்பு, மழைபாதிப்பு, வரத்து குறைவு போன்ற காரணங்களால் தக்காளி விலை சதத்தை எட்டியுள்ளது.

விவசாயிகளின் பாதிப்பு

மழை பாதிப்பு மட்டும் இல்லாமல் கோடைகால வெப்பத்தால் தக்காளி உற்பத்தி செய்யக்கூடிய விளை நிலங்கள் பாதிக்கப்பட்டு செடிகள் கருகி பழங்கள் வீணாகின்றன. இதனால் விவசாயிகளும் பெரும் நட்டத்தை சந்தித்து வருகின்றனர். விவசாயிகள் மட்டுமின்றி விலையுயர்வால் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இல்லத்தரசிகளின் புலம்பல்

ஏற்கனவே கேஸ் சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, பால் விலை உயர்வு, தங்கம் விலை உயர்வால் மக்கள் திண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் தக்காளி விலை உயர்வு மேலும் தடுமாற்றத்தை அளித்துள்ளதாக இல்லத்தரசிகள் தெரிவிக்கின்றனர். இனிவரும் காலங்களில் தக்காளி விலை தற்போது இருப்பதை விட உயரக்கூடுமோ என பலரும் அச்சத்தில் உள்ளனர்.

 

Related posts