சென்னை மாரத்தான் போட்டியில் 42 கிலோ மீட்டர் ஓடிய 9 வயது சிறுமியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
மாரத்தான் போட்டி
சென்னையில் நேற்று நடைபெற்ற கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி அக்ஷிதா 42 கிலோ மீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். இதனை கண்ட சக ஓட்டப்பந்தய வீரர்-வீராங்கனைகள் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இந்நிலையில், சிறுமி அக்ஷிதா 42 கிலோ மீட்டர் தூரத்தை முழுமையாக ஓடி முடித்தார். இதனை பார்த்த சக வீரர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சிறுமியை பாராட்டியுள்ளனர். இது குறித்து சிறுமி கூறுகையில், ‘வருங்காலத்தில் உலகின் அதி வேக ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் போன்று வேகமாக ஓடுவதே தனது விருப்பம்’ என்று சிறுமி தெரிவித்தார். மேலும், சிறுமி அக்ஷிதா தினமும் காலையும் மாலையும் 25 கிலோ மீட்டர் ஓடுவதாகவும், பள்ளி நாட்களில் 2 நாட்கள் பள்ளிக்கு செல்லாமல் அவளுக்கு ஓய்வு அளிக்கப்படுவதாகவும், பயிற்சிக்கான பிரத்தியேகமாக உணவுகள் வழங்கப்படுவதாகவும் உடற்பயிற்சி ஆசிரியர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

