சமூகம்தமிழ்நாடுவிளையாட்டு

அலைச்சறுக்கு போட்டியில் அசத்தும் தமிழ்நாடு பெண்கள் !

அலைச்சறுக்கு விளையாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என இளம் பெண்களுக்கு ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

அலைச்சறுக்கு போட்டி

வெளிநாடுகளில் இந்த விளயைாட்டு மிகவும் பிரபலம் நம்நாட்டில் வளமான கடற்கரை இருந்தும் முறையாக பயற்சி அளிக்க பயிற்சியாளர்கள் இல்லாமல் சூழ்நிலை நிலவியது. இந்த விளையாட்டானது மேற்கத்திய நாடுகளில் அதிகமாக விளையாடி வருகின்றனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம் கடற்கரையானது அலைச்சறுக்கு விளயைாட்டுக்கு ஏதுவாக உள்ளது. இங்கு இருப்பதால் இங்கே நிறைய பெண் வீரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.

வருடத்திற்கு ஒரு முறை ஆண் மற்றும் பெண்களுக்கு என தனித்தனியாக அலைச்சறுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றது. கொரோனா பதிப்பின் காரணமாக இரண்டு வருடங்கள் போட்டிகள் எதுவும் நடைபெறாமல் இருந்தது. இந்த வருடம் கடந்த வாரத்தில் போட்டிகள் நடைபெற்றது. இந்திய சர்ப் கூட்டமைப்பின் சார்பில் இந்த விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து வந்திருந்த நுாற்றுக்கும் அதிகமான வீரர்கள் கலந்துகொண்டனர்.

Related posts