நீர் வரத்து குறைவின் காரணமாக ஒகேனக்கலில் படகு சவாரி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
படகு சவாரி
கடந்த ஒரு மத காலமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கோடைமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், கடந்த நாட்களில் ஒகேனக்கலில் படகு சவாரி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நீர்வரத்து குறைந்ததால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 16,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் அருவியில் தடை நீடிக்கப்பட்டுள்ளது.

