சினிமாவெள்ளித்திரை

என் கையில் 9 படங்கள் இருக்கிறது – விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

வெற்றி விழா

இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில், நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இதில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடிக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ்-தெலுங்கு என இருமொழிகளில் கடந்த 2ம் தேதி வெளியானது. இத்திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ‘கட்டா குஸ்தி’ படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால், ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் ரூ.30 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும், என் கையில் 9 படங்கள் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

Related posts