ட்ரைலர் அறிவிப்பு
‘வீரமே வாகை சூடும்’ படத்தை தொடர்ந்து நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லத்தி’. இப்படத்தை இயக்குனர் வினோத் குமார் இயக்க, நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தை ‘ராணா புரொடக்ஷன்’ தயாரித்துள்ளது. அண்மையில் இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டாவது பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வருகிற டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘லத்தி’ படத்தின் டிரைலர் வருகிற 12-ம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
சவுதியில் அரசுக்கு எதிரான பெண்ணுக்கு சிறை தண்டனை !