தமிழ்நாடுவணிகம்

விநாயகர் சதுர்த்தி விழா : கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை !

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை அமைக்கப்படவுள்ளது.

சிறப்பு சந்தை

பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை போன்ற பண்டிகைக்கு பொதுமக்கள் வசதிக்காக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், பூ மார்கெட் வளாகத்தில் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு பூஜை பொருட்களை விற்பனை செய்யப்படுவது வழக்கம். கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பு சந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை சிறப்பு சந்தை நடத்த அங்காடி நிர்வாக குழு சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related posts