தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேதாந்தா நிறுவனம் விற்க முடிவு செய்து விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட்
தூத்துக்குடியில் தொழிலதிபர் அணில் அகர்வாலுக்கு சொந்தமான வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் அலை இயங்கி வந்தது. இந்த அலையில் இருந்து வெளியாகும் புகை மற்றும் கழிவு நீரால் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டு வந்தது. இதனால் அப்பகுதி மக்கள் பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் போராட்டம்
இந்த போராட்டத்தில் ஏராளமான கட்சிகள், அமைப்புகள், மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இப்போராட்டம் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. இந்த போராட்டத்தின் 100வது நாளாக மே 22 2018 அன்று அலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவகத்தை நோக்கி பேரணியாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் 2 பெண்கள் உட்பட 13 நபர்களை போலீசார் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது நாட்டையை பரபரப்புக்கு உள்ளாக்கியது.
வேதாந்தா வழக்கு
இதன் பின்னர் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமா மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் எனக் கோரி கடந்த 2020ம் ஆண்டு வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனுவைச் சென்னை ஐகோர்ட் நிராகரித்தது. இதுகுறித்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் வழக்கு ஒரு புறம் நடைபெற்று வருகிறது. இந்தச் சூழலில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை வேதாந்தா நிறுவனம் விற்க முடிவு செய்துள்ளதாக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆலை விற்பனை
இதற்கான விளம்பரம் முன்னணி நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆலையை வாங்க விரும்புவோர் ஜூலை 4 மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு உத்தரவை தொடர்ந்து ஆலை கடந்த சில ஆண்டுகளாகவே மூடப்பட்டுள்ள நிலையில், வேதாந்தா நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.