இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது டெல்லி – பாட்னா இடையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படும் நிலையில் முழு விவரங்களை காணலாம்.
இந்திய ரயில்வே பிரீமியம் வகை அதிவேக பயண சேவையாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்களை அறிமுகம் செய்தது. இதில் முழுவதும் ஏசி வசதிகள் உடன் இருக்கைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் படுக்கை வசதிகள் உடன் கூடிய ரயிலை தயாரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டது. இதற்காக சென்னை ஐ.சி.எஃப் உடன் ஒப்பந்தம் போடப்பட்ட இந்திய ரயில்வே வாரியம் மும்முரம் காட்டியது. இதன் பணிகள் முடிவடைந்து சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டு பயன்பாட்டிற்கு வருவதற்கு தயாராக காத்திருக்கிறது.
தீபாவளி பண்டிகைக்கு முன்பாக நடப்பு செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இந்நிலையில் வழித்தடம் தொடர்பாக முக்கியத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் தலைநகர் டெல்லி மற்றும் பிகார் தலைநகர் பாட்னா இடையில் இயக்கப்படும் எனக் கூறுகின்றனர்.

