சுற்றுசூழல்தமிழ்நாடு

ஆயுதபூஜை விடுமுறை – நாளை வண்டலூர் பூங்கா திறப்பு!

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வண்டலூர் பூங்கா

மேலும், தற்போது புதிதாக வண்ணத்துப்பூச்சி பூங்க மற்றும் மீன் கண்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வாரஇறுதி நாட்களில் சுமார் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகிறார்கள். வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை வண்டலூர் பூங்கா மூடப்பட்டிருப்பது வழக்கம்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமையான நாளை ஆயுத பூஜை விடுமுறை நாள் என்பதால் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வரக்கூடும் என்று வண்டலூர் பூங்காவை திறக்க முடிவு செய்துள்ளனர்.

Related posts